குறள் 1108 — புணர்ச்சி மகிழ்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வீழும் இருவர்க் கினிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 226 · ஸ்கேன் 259 · மூலமும் சான்றும்