இன்பத்துப்பால் · களவியல் · புணர்ச்சி மகிழ்தல்

குறள் 1109புணர்ச்சி மகிழ்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 226 · ஸ்கேன் 259 · மூலமும் சான்றும்