இன்பத்துப்பால் · களவியல்
112. நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1111–1120
- குறள் 1111நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்.
- குறள் 1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று.
- குறள் 1113முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
- குறள் 1114காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்று.
- குறள் 1115அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்குநல்ல படாஅ பறை.
- குறள் 1116மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்.
- குறள் 1117அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.
- குறள் 1118மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி.
- குறள் 1119மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்பலர்காணத் தோன்றல் மதி.
- குறள் 1120அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்.