இன்பத்துப்பால் · களவியல் · நலம் புனைந்து உரைத்தல்

குறள் 1119நலம் புனைந்து உரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்பலர்காணத் தோன்றல் மதி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

மூலம் · அச்சுப் பக்கம் 228 · ஸ்கேன் 261 · மூலமும் சான்றும்