குறள் 1115 — நலம் புனைந்து உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்குநல்ல படாஅ பறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்.
மூலம் · அச்சுப் பக்கம் 227 · ஸ்கேன் 260 · மூலமும் சான்றும்