இன்பத்துப்பால் · களவியல்
113. காதற் சிறப்புரைத்தல்
குறள் 1121–1130
- குறள் 1121பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்.
- குறள் 1122உடம்பொ டுயிரிடை என்னமற் றன்னமடந்தையொ டெம்மிடை நட்பு.
- குறள் 1123கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற் கில்லை யிடம்.
- குறள் 1124வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்து.
- குறள் 1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
- குறள் 1126கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்நுண்ணியரெம் காத லவர்.
- குறள் 1127கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக் கறிந்து.
- குறள் 1128நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.
- குறள் 1129இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னுமிவ் வூர்.
- குறள் 1130உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னுமிவ் வூர்.