இன்பத்துப்பால் · களவியல்
114. நாணுத் துறவுரைத்தல்
குறள் 1131–1140
- குறள் 1131காமம் உழந்து வருந்தினார்க் கேமமடலல்ல தில்லை வலி.
- குறள் 1132நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.
- குறள் 1133நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.
- குறள் 1134காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடுநல்லாண்மை என்னும் புணை.
- குறள் 1135தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்.
- குறள் 1136மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடலொல்லா பேதைக்கென் கண்.
- குறள் 1137கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணிற் பெருந்தக்க தில்.
- குறள் 1138நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்.
- குறள் 1139அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டு.
- குறள் 1140யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.