இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்

குறள் 1137நாணுத் துறவுரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணிற் பெருந்தக்க தில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும் கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 232 · ஸ்கேன் 265 · மூலமும் சான்றும்