இன்பத்துப்பால் · களவியல்

115. அலர் அறிவுறுத்தல்

குறள் 11411150
  1. குறள் 1141
    அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.
  2. குறள் 1142
    மலரன்ன கண்ணாள் அருமை அறியாதலரெமக் கீந்ததிவ் வூர்.
  3. குறள் 1143
    உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
  4. குறள் 1144
    கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.
  5. குறள் 1145
    களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிது.
  6. குறள் 1146
    கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று.
  7. குறள் 1147
    ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளுமிந் நோய்.
  8. குறள் 1148
    நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்காமம் நுதுப்பேம் எனல்.
  9. குறள் 1149
    அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் என்றார்பலர்நாண நீத்தக் கடை.
  10. குறள் 1150
    தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்குமிவ் வூர்.