இன்பத்துப்பால் · களவியல் · அலர் அறிவுறுத்தல்

குறள் 1146அலர் அறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் “கிரகணம்” எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர்முழுவதும் அலராகப் பரவியது.

மூலம் · அச்சுப் பக்கம் 234 · ஸ்கேன் 267 · மூலமும் சான்றும்