குறள் 1145 — அலர் அறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 233 · ஸ்கேன் 266 · மூலமும் சான்றும்