குறள் 1144 — அலர் அறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப் போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 233 · ஸ்கேன் 266 · மூலமும் சான்றும்