இன்பத்துப்பால் · களவியல் · அலர் அறிவுறுத்தல்

குறள் 1143அலர் அறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!

மூலம் · அச்சுப் பக்கம் 233 · ஸ்கேன் 266 · மூலமும் சான்றும்