குறள் 1147 — அலர் அறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளுமிந் நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 234 · ஸ்கேன் 267 · மூலமும் சான்றும்