இன்பத்துப்பால் · கற்பியல்

116. பிரிவு ஆற்றாமை

குறள் 11511160
  1. குறள் 1151
    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை.
  2. குறள் 1152
    இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வு.
  3. குறள் 1153
    அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.
  4. குறள் 1154
    அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க் குண்டோ தவறு.
  5. குறள் 1155
    ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு.
  6. குறள் 1156
    பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை.
  7. குறள் 1157
    துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை.
  8. குறள் 1158
    இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்இன்னா தினியார்ப் பிரிவு.
  9. குறள் 1159
    தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ.
  10. குறள் 1160
    அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர்.