இன்பத்துப்பால் · கற்பியல்
117. படர்மெலிந்து இரங்கல்
குறள் 1161–1170
- குறள் 1161மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.
- குறள் 1162கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குரைத்தலும் நாணுத் தரும்.
- குறள் 1163காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்நோனா உடம்பின் அகத்து.
- குறள் 1164காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்.
- குறள் 1165துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்.
- குறள் 1166இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.
- குறள் 1167காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்.
- குறள் 1168மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்ல தில்லை துணை.
- குறள் 1169கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா.
- குறள் 1170உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோவென் கண்.