இன்பத்துப்பால் · கற்பியல் · படர்மெலிந்து இரங்கல்

குறள் 1161படர்மெலிந்து இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல், பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 237 · ஸ்கேன் 270 · மூலமும் சான்றும்