குறள் 1160 — பிரிவு ஆற்றாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?
மூலம் · அச்சுப் பக்கம் 236 · ஸ்கேன் 269 · மூலமும் சான்றும்