குறள் 1159 — பிரிவு ஆற்றாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரை யொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!
மூலம் · அச்சுப் பக்கம் 236 · ஸ்கேன் 269 · மூலமும் சான்றும்