குறள் 1158 — பிரிவு ஆற்றாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்இன்னா தினியார்ப் பிரிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.
மூலம் · அச்சுப் பக்கம் 236 · ஸ்கேன் 269 · மூலமும் சான்றும்