குறள் 1157 — பிரிவு ஆற்றாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!
மூலம் · அச்சுப் பக்கம் 236 · ஸ்கேன் 269 · மூலமும் சான்றும்