இன்பத்துப்பால் · கற்பியல் · படர்மெலிந்து இரங்கல்

குறள் 1162படர்மெலிந்து இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குரைத்தலும் நாணுத் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 237 · ஸ்கேன் 270 · மூலமும் சான்றும்