இன்பத்துப்பால் · கற்பியல்

118. கண் விதுப்பழிதல்

குறள் 11711180
  1. குறள் 1171
    கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாங்காட்ட யாங்கண் டது.
  2. குறள் 1172
    தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்ப தெவன்.
  3. குறள் 1173
    கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து.
  4. குறள் 1174
    பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து.
  5. குறள் 1175
    படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்காமநோய் செய்தவென் கண்.
  6. குறள் 1176
    ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது.
  7. குறள் 1177
    உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துவேண்டி அவர்க்கண்ட கண்.
  8. குறள் 1178
    பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணா தமைவில கண்.
  9. குறள் 1179
    வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.
  10. குறள் 1180
    மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து.