இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்

குறள் 1180கண் விதுப்பழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது; யாம் மறைப்பதை அறிந்துகொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.

மூலம் · அச்சுப் பக்கம் 240 · ஸ்கேன் 273 · மூலமும் சான்றும்