இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்

குறள் 1179கண் விதுப்பழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத்தானே இருக்க முடியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 240 · ஸ்கேன் 273 · மூலமும் சான்றும்