குறள் 1175 — கண் விதுப்பழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்காமநோய் செய்தவென் கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.
மூலம் · அச்சுப் பக்கம் 239 · ஸ்கேன் 272 · மூலமும் சான்றும்