இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்

குறள் 1177கண் விதுப்பழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துவேண்டி அவர்க்கண்ட கண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துத் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப் போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 240 · ஸ்கேன் 273 · மூலமும் சான்றும்