இன்பத்துப்பால் · கற்பியல்

119. பசப்புறு பருவரல்

குறள் 11811190
  1. குறள் 1181
    நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க் குரைக்கோ பிற.
  2. குறள் 1182
    அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்பு.
  3. குறள் 1183
    சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து.
  4. குறள் 1184
    உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு.
  5. குறள் 1185
    உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்மேனி பசப்பூர் வது.
  6. குறள் 1186
    விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
  7. குறள் 1187
    புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
  8. குறள் 1188
    பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்துறந்தார் அவரென்பார் இல்.
  9. குறள் 1189
    பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்.
  10. குறள் 1190
    பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்.