இன்பத்துப்பால் · கற்பியல் · பசப்புறு பருவரல்

குறள் 1188பசப்புறு பருவரல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்துறந்தார் அவரென்பார் இல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பதுதான் என்று சொல்பவர் இல்லையே.

மூலம் · அச்சுப் பக்கம் 242 · ஸ்கேன் 275 · மூலமும் சான்றும்