குறள் 1187 — பசப்புறு பருவரல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
மூலம் · அச்சுப் பக்கம் 242 · ஸ்கேன் 275 · மூலமும் சான்றும்