குறள் 1186 — பசப்புறு பருவரல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விளக்கின் ஒளி குறையும் சமயம் பார்த்துப் பரவிவரும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும் போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 242 · ஸ்கேன் 275 · மூலமும் சான்றும்