இன்பத்துப்பால் · கற்பியல்
120. தனிப்படர் மிகுதி
குறள் 1191–1200
- குறள் 1191தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி.
- குறள் 1192வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.
- குறள் 1193வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுநம் என்னும் செருக்கு.
- குறள் 1194வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்.
- குறள் 1195நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.
- குறள் 1196ஒருதலையான் இன்னாது காமங்காப் போலஇருதலை யானும் இனிது.
- குறள் 1197பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.
- குறள் 1198வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.
- குறள் 1199நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டஇசையும் இனிய செவிக்கு.
- குறள் 1200உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு.