இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதி

குறள் 1196தனிப்படர் மிகுதி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒருதலையான் இன்னாது காமங்காப் போலஇருதலை யானும் இனிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை. துயரமும் உருவாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 244 · ஸ்கேன் 277 · மூலமும் சான்றும்