இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதி

குறள் 1199தனிப்படர் மிகுதி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டஇசையும் இனிய செவிக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 244 · ஸ்கேன் 277 · மூலமும் சான்றும்