இன்பத்துப்பால் · கற்பியல்
121. நினைந்தவர் புலம்பல்
குறள் 1201–1210
- குறள் 1201உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.
- குறள் 1202எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன் றில்.
- குறள் 1203நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்.
- குறள் 1204யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்தோஒ உளரே அவர்.
- குறள் 1205தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத் தோவா வரல்.
- குறள் 1206மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்உற்றநாள் உள்ள உளேன்.
- குறள் 1207மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்.
- குறள் 1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு.
- குறள் 1209விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.
- குறள் 1210விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி.