இன்பத்துப்பால் · கற்பியல்

122. கனவுநிலை உரைத்தல்

குறள் 12111220
  1. குறள் 1211
    காதலர் தூதொடு வந்த கனவினுக்கியாதுசெய் வேன்கொல் விருந்து.
  2. குறள் 1212
    கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.
  3. குறள் 1213
    நனவினான் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.
  4. குறள் 1214
    கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தற்கு.
  5. குறள் 1215
    நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.
  6. குறள் 1216
    நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்காதலர் நீங்கலர் மன்.
  7. குறள் 1217
    நனவினான் நல்காக் கொடியார் கனவினான்என்னெம்மைப் பீழிப் பது.
  8. குறள் 1218
    துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
  9. குறள் 1219
    நனவினான் நல்காரை நோவர் கனவினான்காதலர்க் காணா தவர்.
  10. குறள் 1220
    நனவினான் நந்தத்தார் என்பர் கனவினான்காணார்கொல் இவ்வூ ரவர்.