குறள் 1218 — கனவுநிலை உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 248 · ஸ்கேன் 281 · மூலமும் சான்றும்