இன்பத்துப்பால் · கற்பியல்
123. பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1221–1230
- குறள் 1221மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.
- குறள் 1222புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.
- குறள் 1223பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்துன்பம் வளர வரும்.
- குறள் 1224காதலர் இல்வழி மாலை கொலைக்களத்தேதிலர் போல வரும்.
- குறள் 1225காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை.
- குறள் 1226மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்.
- குறள் 1227காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலருமிந் நோய்.
- குறள் 1228அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.
- குறள் 1229பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.
- குறள் 1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயுமென் மாயா உயிர்.