குறள் 1221 — பொழுதுகண்டு இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
மூலம் · அச்சுப் பக்கம் 249 · ஸ்கேன் 282 · மூலமும் சான்றும்