இன்பத்துப்பால் · கற்பியல்
124. உறுப்புநலன் அழிதல்
குறள் 1231–1240
- குறள் 1231சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண்.
- குறள் 1232நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.
- குறள் 1233தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்.
- குறள் 1234பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.
- குறள் 1235கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்.
- குறள் 1236தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்கொடியார் எனக்கூறல் நொந்து.
- குறள் 1237பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்வாடுதோட் பூசல் உரைத்து.
- குறள் 1238முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்.
- குறள் 1239முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.
- குறள் 1240கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டு.