குறள் 1231 — உறுப்புநலன் அழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.
மூலம் · அச்சுப் பக்கம் 251 · ஸ்கேன் 284 · மூலமும் சான்றும்