இன்பத்துப்பால் · கற்பியல்
125. நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1241–1250
- குறள் 1241நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கு மருந்து.
- குறள் 1242காத லவரிலர் ஆகநீ நோவதுபேதைமை வாழியென் நெஞ்சு.
- குறள் 1243இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல்.
- குறள் 1244கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று.
- குறள் 1245செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.
- குறள் 1246கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.
- குறள் 1247காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேனிவ் விரண்டு.
- குறள் 1248பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
- குறள் 1249உள்ளத்தார் காத லவராக உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு.
- குறள் 1250துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமாஇன்னும் இழத்தும் கவின்.