இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள் 1244நெஞ்சொடு கிளத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும்போது கண்களையும்கூட அழைத்துக் கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டும் என்று என்னையே அவை தின்றுவிடுவதுபோல் இருக்கின்றன.

மூலம் · அச்சுப் பக்கம் 253 · ஸ்கேன் 286 · மூலமும் சான்றும்