இன்பத்துப்பால் · கற்பியல்

126. நிறையழிதல்

குறள் 12511260
  1. குறள் 1251
    காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
  2. குறள் 1252
    காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்.
  3. குறள் 1253
    மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும்.
  4. குறள் 1254
    நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்மறையிறந்து மன்று படும்.
  5. குறள் 1255
    செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்உற்றார் அறிவதொன் றன்று.
  6. குறள் 1256
    செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோஎற்றென்னை உற்ற துயர்.
  7. குறள் 1257
    நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின்.
  8. குறள் 1258
    பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படை.
  9. குறள் 1259
    புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்கலத்தல் உறுவது கண்டு.
  10. குறள் 1260
    நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.