இன்பத்துப்பால் · கற்பியல் · நிறையழிதல்

குறள் 1260நிறையழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

மூலம் · அச்சுப் பக்கம் 256 · ஸ்கேன் 289 · மூலமும் சான்றும்