குறள் 1261 — அவர்வயின் விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.
மூலம் · அச்சுப் பக்கம் 257 · ஸ்கேன் 290 · மூலமும் சான்றும்