இன்பத்துப்பால் · கற்பியல் · அவர்வயின் விதும்பல்

குறள் 1262அவர்வயின் விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாட்டியிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

மூலம் · அச்சுப் பக்கம் 257 · ஸ்கேன் 290 · மூலமும் சான்றும்