இன்பத்துப்பால் · கற்பியல்
127. அவர்வயின் விதும்பல்
குறள் 1261–1270
- குறள் 1261வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.
- குறள் 1262இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்து.
- குறள் 1263உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.
- குறள் 1264கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு.
- குறள் 1265காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்குமென் மென்தோள் பசப்பு.
- குறள் 1266வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.
- குறள் 1267புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்ணன்ன கேளிர் வரின்.
- குறள் 1268வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.
- குறள் 1269ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.
- குறள் 1270பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்உள்ளம் உடைந்துக்கக் கால்.