இன்பத்துப்பால் · கற்பியல் · அவர்வயின் விதும்பல்

குறள் 1267அவர்வயின் விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்ணன்ன கேளிர் வரின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல் கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

மூலம் · அச்சுப் பக்கம் 258 · ஸ்கேன் 291 · மூலமும் சான்றும்