குறள் 1266 — அவர்வயின் விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆக வேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 258 · ஸ்கேன் 291 · மூலமும் சான்றும்